• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சொந்துரு பியச' சலுகை கடன் திட்டத்தின் பயனாளிகளின் அடிப்படையை விரிவாக்குதல்
- 750 சதுர அடியை விட குறைந்த வீடுகளை விரிவு படுத்துவதற்கு அல்லது அவற்றின் நிருமாணிப்புகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சிக்கும் இருந்தபோதிலும் நிதி கஷ்டம் காரணமாக அவ்வாறு செய்வதற்கு இயலாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 200,000/- ரூபா வரை நிதி வழங்குவதற்கு 'சொந்துரு பியச' சலுகை கடன் திட்டம் 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது. 2020 ஆம் ஆண்டளவில் 100,000 கடன் பயனாளிகளுக்கு இதன் மூலம் நலன்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, 2017 திசெம்பர் 14 ஆம் திகதியன்றுக்கு இந்த கடன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை 3,354 ஆகும்.

நகர பிரதேசங்களுக்கு வௌியேயுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களிலும் பழைய வீட்டு உரிமையாளர்களிலும் பெரும்பாலானோரின் வீடுகளின் அளவானது 750 சதுர அடிக்கு கூடுதலானமையினால் அவர்கள் இந்த கடன் திட்டத்திற்கு தகைமை பெற மாட்டார்களென வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கடன் திட்டம் சார்பில் பரிசீலனை செய்யப்படும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீடுகளின் சதுர அடியினை 1,000 சதுர அடிகள் வரை அதிகரிப்பதன் மூலம் 'சொந்துரு பியச' சலுகை கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக் கொள்வதற்கு தகைமை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.