• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்துக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை
அரசாங்கத்தின் சொத்துக்கள் மற்றும் செலவினங்கள் முகாமித்தலை மேற்பார்வை செய்யும் நோக்கில் 2017 மார்ச் மாதம் 07 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக கணக்குத் தணிக்கையாளர் நாயகம் அலுவலகமொன்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிதி சாராத சொத்துக்கள் யாவற்றையும் தழுவும் விதத்தில் தயாரிக்கப்பட்ட மைய சொத்துக்கள் ஆவணமொன்றை பேணுவது இந்த அலுவலகத்தின் அடிப்படை பணியாகும். இந்த அலுவல கத்திற்கு 2017 திசெம்பர் 14 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல் களின் அடிப்படையில் அரசாங்கத்துக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகள் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதோடு, அமைச்சர வையினால் இந்தத் தகவல்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்தத் தகவல்களின் பொழிப்பு பின்வருமாறாகும்:

அரசாங்கத்துக்குச் சொந்தமான மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 57,961
இவற்றில் பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை - 50,238
   மத்திய அரசாங்கம் 26,732
   அரசாங்க தொழில் முயற்சிகள் 23,506
பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை - 7,723
   மத்திய அரசாங்கம் 5,922
   அரசாங்க தொழில் முயற்சிகள் 1,801


தற்போது பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள மோட்டார் வாகனங்களை துரிதமாக பராதீனப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.