• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'வரி அடிப்படை அழிவடைதல், இலாபம் இடம்பெயர்தல்' கருத்திட்டத்திற்கான அங்கத்துவ கட்டணத்தை செலுத்துதல்
- தேசிய மற்றும் சர்வதேச வரி கட்டமைப்பில் நிலவும் இடைவௌி காரணமாக சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ள சர்வதேச கம்பனிகள் வரி பொறுப்பினை குறைப்பதற்கு அல்லது வரி செலுத்தாமல் இருப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொள்கின்றமை தெரியவந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு 'வரி அடிப்படை அழிவடைதல், இலாபம் இடம்பெயர்தல்' கருத்திட்டம் என்னும் பெயரில் செயற்பாட்டுத் திட்டமொன்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பினாலும் (The Organization for Economic Cooperation and Development - OECD) G-20 நாடுகளினாலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை 2016 ஆம் ஆண்டில் இதில் பூரண உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டதோடு, தற்போது 107 நாடுகள் இந்த கட்டமைப்புடன் இணைந்துள்ளன. வரி தவிஜர்த்தல் சம்பந்தமாக செயற்படும் போது அரசாங்கங்களுக்கும் வரி நிருவாகிகளுக்கும் தௌிவான தீர்வுகள் இந்த கட்டமைப்பு கருத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றமையினால் இதில் உறுப்புரிமையை பேணுவது இலங்கைக்கு பயனுள்ளதாகும். இதற்கமைவாக இந்தக் கருத்திட்டத்தில் உறுப்புரிமையை வகிப்பதற்காக 30,000 யூரோக்களை அங்கத்துவ கட்டணமாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்புக்கு செலுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.