• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி ஆணைக்குழு சட்டத்தை தயாரித்தல்
- அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக நிதி ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ள பணிகளை மிகப் பயனுள்ள வகையில் நிறைவேற்று வதற்காக இந்த ஆணைக்குழுவுக்கு மேலும் தேவைப்படும் அதிகாரங்களை வழங்கும் பொருட்டு சட்டங்களை வரைவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆராய்வதற்காக நிதி ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்புகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நிதி ஆணைக்குழுவின் பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அதிகாரங்களைக் குறிப்பிட்டு சட்டமூலமொன்றை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.