• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கல்நார் இழையங்களின் (Asbestos) உற்பத்தி, பாவனை மற்றும் கல்நார் இழையங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் இறக்குமதி
- 2018-01-01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக இலங்கையில் கல்நார் இழையங்களின் (Asbestos) உற்பத்தி, பாவனை மற்றும் கல்நார் இழையங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் இறக்குமதி சம்பந்தமாக வரையறைகளை விதித்து அரசாங்கத்தினால் 2016-09-06 ஆம் திகதியன்று கொள்கை தீர்மானமொன்று எடுக்கப்பட்டது. இந்த தீர்மானம் சம்பந்தமாக நிருமாணிப்புத்துறையினால் செய்யப்பட்ட கோரிக்கை உட்பட இந்த விடயம் தொடர்பில் நிபுணர்களினால் செய்யப்பட்ட பிரதிநிதித்துவம் உட்பட விடயத்தௌிவுபடுத்துகைகளின்பால் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கல்நார் இழையங்கள் சுமார் 80 சதவீதம் கூரைகளுக்கு இடப்படுவதற்காக உற்பத்தி செய்வதற்கு எடுக்கப்படுவதோடு, 2018-01-01 ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படவுள்ள வரையறை காரணமாக வீடு நிருமாணிப்பாளர்கள் முகங்கொடுக்க நேரிடும் பிரச்சினை பற்றி ஒருசில அமைச்சரவை உறுப்பினர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. முக்கியமாக மிகக் குறுகிய காலப்பகுதியில் நாட்டில் கல்நார் இழையங்களின் பாவனையை வரையறுப்பதன் காரணமாக அதற்கான ஏற்ற மாற்று உற்பத்திகள் சந்தையில் நியாயமான விலைக்கு பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை உருவாக்குவதற்கான பிரச்சினை சம்பந்தமாகவும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைவாக, இலங்கையில் கல்நார் இழையங்களின் (Asbestos) உற்பத்தி, பாவனை மற்றும் கல்நார் இழையங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் இறக்குமதிக்குரியதாக 2018-01-01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவிருந்த வரையறைகள் தொடர்பிலான தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தலை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.