• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மக்கள் கருத்துக் கணிப்பொன்று அல்லது தேர்தலொன்றுடன் தொடர்புடைய காலப்பகுதிக்குள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினால் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்கள்
- சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றை நடாத்துவதற்குத் தேவையான உகந்த சூழலொன்றை பேணும் நோக்குடன், தேர்தல் காலப்பகுதி ஒன்றின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக உரிமையாளர்கள், சமூகவலைத்தள உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளால் பின்பற்றப்பட வேண்டிய ஊடக வழிகாட்டல்களை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இந்த வழிகாட்டல்களுக்கு இணங்க ஊடக நிறுவனங்கள் தொழிற்படுவதற்கு ஏதுவான அத்தகைய விதத்தில் செயற்படுவது சகல அரசியல் கட்சிகளினதும் / சுயேட்சை குழுக்களினதும் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களினதும், மேற்பார்வை நிறுவனங்களினதும் மற்றும் சிவில் அமைப்புக்களினதும் அதேபோன்று சகல பிரசைகளினதும் பொறுப்பாகும்.

தேர்தல்கள் தொடர்பில் ஊடக அறிக்கைகளை பாராபட்சமின்றி வௌியிடுதல், ஏதேனுமொரு அரசியல் கட்சிக்கு, சுயாதீன குழுவுக்கு அல்லது அபேட்சகர் ஒருவருக்கு அநீதி ஏற்படாத விதத்திலும் ஏதேனும் விசேட நன்மையினை வழங்காத விதத்திலும் ஔி ஒலிபரப்பு காலத்தை ஒதுக்குதல், ஒலிபரப்பப்பட்ட ஏதேனும் விடயமொன்றின் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பொன்றுக்கு அத்துடன் இந்த கருத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் விடயத் தௌிவுபடுத்துகைகளுக்கு போதுமான வாய்ப்பு வழங்குதல், ஊடக ஒழுக்கநெறிகளுக்கு ஏற்ப செயற்படுதல் ஆகியவற்றை உள்ளடக்கும் இவ் ஊடக வழிகாட்டல்களை குறிப்பிட்டு 2017-12-04 ஆம் திகதியிடப்பட்டதும் 2048/1 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.