• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் ஊடாக 2018 ஆம் ஆண்டில் டிஜிட்டல் பிரசார நடவடிக்கைகளை செயற்படுத்துதல்
- ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விருப்புக்குரிய பிரயாண இடமொன்றாக இலங்கையை மேம்படுத் துவதற்கென டிஜிட்டல் பிரசார நடவடிக்கையினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட காரணங்களினால், இந்நோக்கம் கருதி பொருத்தமான முகவராண்மையினை தெரிவுசெய்வது பல காரணங்களினால் தாமதமாகியுள்ளதுடன், இச்செய்முறையினை துரிதப்படுத்துவதற்கான தேவை இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு டிஜிட்டல் பிரசார முகவராண்மைகளிடமிருந்து இந்நோக்கத்திற்காக விலைமனுக்களை கோரும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.