• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் காட்டு யானைகள் தொகை மற்றும் வனவுயிர் வளங்களின் பாதுகாப்பிற்காக வனவுயிர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்தல்
- வனவுயிர் பாதுகாப்பு பிரதேசங்களுக்கு உள்ளேயும் வௌியேயும் வனவுயிர் வளங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு அவசியமான சட்ட அதிகாரத்தை வனவுயிர் உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச்சட்டம் உரித்தளித்துள்ளது. காட்டு விலங்கு - மனித மோதல் முகாமைத்துவம் மற்றும் யானை - மனித மோதல் முகாமைத்துவம் உள்ளடங்கலாக தொடர்புபட்ட கடமைகள் ஆகியனவும் வனவுயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. யானை - மனித மோதலின் காரணமாகவும் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 240 காட்டு யானைகள் இறக்கின்றன. அதேவேளை, பாதுகாப்பு பிரதேசங்களுக்குள் கொம்பன் யானைகளை கொல்லும் ஒருசில நிகழ்வுகள் கடந்த காலங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

ஆதலால், அத்தகைய சூழ்நிலைகள் மீண்டெழுவதை தடுக்கும் மற்றும் வன எல்லைகளுக்குள் கொம்பன் யானைகள் உட்பட யானைத் தொகையினையும் மற்றும் ஏனைய காட்டு விலங்குகள் உள்ளடங்கலாக நாட்டின் வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்குடன், வனவுயிர் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்புப்படை உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய இணைந்த செயலணியொன்றைத் தாபிப்பதற்கும் அவசியமான நேரங்களில் வனவுயிர் பாதுகாப்பு திணைக்களத்தினதும் இலங்கை மகாவலி அதிகாரசபையினதும் களப்பணியாளர்களின் உதவியுடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மேலும், காட்டு யானைகளை கொன்றமைக்கு நீதிமன்றமொன்றினால் குற்றவாளியாக காணப்பட்ட ஆளொருவருக்கு தொடர்பில் ஆயுள் தண்டனையை விதிப்பதற்கு ஏதுவாக விலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தை திருத்தும் பொருட்டு செய்யப்பட்ட பிரேரிப்புக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.