• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழ்க்கைச்செலவு பற்றிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணுதலும் வௌ்ளப்பெருக்கு மற்றும் வரட்சி நிவாரணங்களை வழங்குதலும்
- எதிர்பாராத காலநிலை நிலைமைகளின் தாக்கத்தின் காரணமாக நாட்டில் உணவு விநியோகத்திற்கு தாக்கம் செலுத்தியுள்ளமையினால் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதேபோன்று அண்மையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் வரட்சி காரணமாகவும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக வாழ்க்கைச்செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவினாலும் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினாலும் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக பின்வரும் நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

i. வீட்டு அலகொன்று சார்பில் ஏற்கக்கூடிய விலைக்கு அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை மீளாய்வு செய்வதற்கான உரிய உத்தியோகத்தர்களைக் கொண்ட "குடும்ப வரவுசெலவுத்திட்ட அலகு" ஒன்றைத் தாபித்தல்.

ii. வாழ்க்கைச்செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவின் எடுக்கப்படும் தீர்மானங்களின் நடைமுறைப்படுத்தலின் வெற்றியினை உறுதிப்படுத்துவதற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரின் தலைமையிலும் ஏனைய உரிய அமைச்சுக்களின் செயலாளர்களினதும் பங்குபற்றுதலுடன் ஒருங்கிணைப்பு குழுவொன்றைத் தாபித்தல்.

iii. சிறப்பு விற்பனை நிலையங்கள், சதொசா மற்றும் ஏனைய தனியார் விற்பனை நிலையங்கள் ஊடாக சிங்கள தமிழ் புத்தாண்டு காலம்வரை அரிசி, பருப்பு, சீனி, நெத்தலி, வெங்காயம், கிழங்கு, ரின்மீன் ஆகிய அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கலாக சலுகை பொதியொன்றை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமொனறை நடைமுறைப்படுத்துதல்.

iv. இதில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளினால் செலுத்தப்படும் வரையிலிருந்து 50 சதவீதத்தை மீளளிப்பதற்கும் மின்சார செலவுக்கு வரிச் சலுகை வழங்குவதற்குமான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்.

v. தேங்காய் உள்ளீடு இறக்குமதியை துரிதப்படுத்தும் பொருட்டு இந்த பணியினை மேற்பார்வை செய்யும் பொறுப்பினை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு கையளித்தல்.

vi. தேங்காய் இறக்குமதியின்போது அவுஸ்திரேலியாவினால் பின்பற்றப்படும் தொற்று தடைக் காப்பு வழிமுறையினை இலங்கையில் தாபிக்கும் பொருட்டு அவுஸ்திரேலியாவின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் பற்றி ஆராய்தல்.

vii. வௌ்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் செலுத்துவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ள நட்டஈட்டுத் தொகைக்கும் மதிப்பீட்டு பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசத்தை 2017 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர், மாவட்ட செயலாளர்கள் ஊடாக அனர்த்தத்திற்குள்ளானவர்களுக்குச் செலுத்துதல்.

viii. சீரற்ற காலநிலை காரணமாக மூன்று அல்லது நான்கு போகங்கள் அழிவடைந்துள்ள குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்நறுவை மற்றும் வன்னி மாவட்டங்களிலுள்ள விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.