• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"சூரிய சக்தி சங்ராமய" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
- "சூரிய சக்தி சங்ராமய" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த மின்சாரத்தினை தேசிய மின்சார முறைமைக்குள் எடுப்பதற்கு பொருத்தமான துணை நெய்யறி மின் நிலையங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் 02 ஆம் கட்டத்தின் கீழ் 20 துணை நெய்யறி மின் நிலையங்கள் சார்பில் மின்சாரம் கொள்வனவு செய்யும் அடிப்படையில் 1 மொகாவொட் ஆற்றல் கொண்ட சிறிய அளவிலான 60 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் சிபாரிசின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு உரிய சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான கேள்வியை கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.