• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹோமாகம, தியகம உத்தேச விளையாட்டு அக்கடமியின் செயற்கை ஓடுதளத்தினை பதித்தலும் மெய்வல்லுநர் மைதானத்தை விருத்தி செய்தலும்
- திருத்த வேலைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் அடங்கலாக ஹோமாகம, தியகம உத்தேச விளையாட்டு அக்கடமியின் 09 ஓடுபாதைகளைக் கொண்ட 400 மீற்றர் செயற்கை ஓடுதளத்தினை பதிப்பதற்கும் காற்பந்து, ஹொக்கி மற்றும் ரகர் விளையாட்டுக்கள் என்பன சார்பில் புல் மைதானத்துடன் மெய்வல்லுநர் மைதான வசதிகளை செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 310 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s CML MTD Construction Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.