• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகின் விசைச்சுழலி மற்றும் உரிய பிரதான கருவிகளின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்தல்
- புத்தளம் லக்விஜய மின் உற்பத்தி நிலையம் 300 மெகாவொட் வீதம் கொண்ட 03அலகுகளைக் கொ்ணடுள்ளது. 2014 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்ட அதன் இரண்டாம் அலகின் விசைச்சுழலியின் பிரதான 15 முறைமைகள் உள்ளதோடு இந்த முறைமைகளுக்கு முதற்தடவையாக செய்யப்படும் பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளுக்காக இதன் ஆரம்ப ஒப்பந்தக்காரரான China Machinery Engineering Corporation (CMEC) நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை 2019 செப்ரெம்பர் மாதம் வரை செல்லுபடியாகும்.

இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இதன் பராமரிப்பு பணிகளை செய்வதற்கான ஒப்பந்தத்தை 263.4 மில்லியன் ரூபாவுக்கு China Machinery Engineering Corporation (CMEC) நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.