• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புறக்கோட்டை மனிங் சந்தையை பேலியகொடை பிரதேசத்துக்கு இடம் நகர்த்துவதற்குத் தேவையான கட்டடங்களை நிருமாணித்தல்
- புறக்கோட்டை பிரதேசத்தில் மனிங் சந்தை அமைந்துள்ள பிரதேசத்தில் பல்நோக்க போக்குவரத்து மத்திய நிலையமொன்று நிருமாணிக்கப்படவுள்ள மையினால், இந்த சந்தையை பேலியகொடை பிரதேசத்துக்கு இடம் நகர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இதற்காக பேலியகொட பிரதேசத்திலுள்ள உரிய காணியை அபிவிருத்தி செய்யும் அத்துடன் அதன் அத்திபாரம் நிருமாணிக்கும் பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்படும் நிலையில் உள்ளன.

இதற்கமைவாக இதன் அடுத்த கட்டமாக திட்டமிடப்பட்டுள்ள மேற் கட்டமைப்பின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 4,507 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Maga Engineering (Pvt.) Ltd நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.