• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை வாழ்க்கைத் தொழில் தொழினுட்ப பல்கலைக்கழகத்தினாலும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தினாலும் வழங்கப்படும் பட்டப்பாட நெறிகளின் தரத்தையும் அங்கீகாரத்தையும் உயர்த்துதல்
- மிகக்கூடுதலான செய்வினை அறிவினை வழங்கும் தொழினுட்ப மற்றும் வாழ்க்கைத் தொழில் பட்டப்பாட நெறிகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் வெவ்வேறு பாராளுமன்ற சட்டங்களின்கீழ் இலங்கை வாழ்க்கைத் தொழில் தொழினுட்ப பல்கலைக்கழகமும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகமும் தாபிக்கப்பட்டுள்ளன. இந்த பல்கலைக்கழகங்களினதும் வழங்கப்படும் பட்டபாடநெறிகளின் தரத்தையும் அங்கீகாரத்தையும் உயர்த்தும் நோக்கில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏனைய அரசாங்க பல்பலைக்கழகங்கள் சார்பில் பின்பற்றப்படும் நிறுவன ரீதியிலான மீளாய்வு மற்றும் பாடநெறிகள் / நிகழ்ச்சித்திட்டங்கள் மீளாய்வு செய்யும் வழிமுறைகளை குறித்த இந்த இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பிலும் பொருத்தமானவாறு ஏற்புடைத்தாக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினாலும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.