• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் அரசாங்க உத்தியோகத்தர்களை பயிற்றுவிப்பதற்காக தென்கொரிய குடியரசின் School of Public Policy and Management நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன் படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
- இலங்கையில் அரசாங்க சேவையிலுள்ள அகிலநாட்டு சேவைகளுக்குரிய உத்தியோகத்தர்களின் ஆற்றலை மேம்படுத்தும் பொறுப்பு இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களின் தரத்தினை விருத்தி செய்வதற்கு வௌிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் அதன் தொடர்பினை விரிவுபடுத்திக் கொள்வதற்கு இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதற்கமைவாக, அரசாங்க கொள்கை, நிருவாகம், மனிதவள முகாமைத்துவம் போன்ற துறைகளில் திறன் அபிவிருத்தி உட்பட அறிவினை பரிமாறிக் கொள்வது சம்பந்தமாக தென்கொரியாவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமொன்றான KDI School of Public Policy and Management நிறுவனத்துக்கும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்திற்கும் இடையில் பரஸ்பர உறவினை பலப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.