• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் நீதிமன்றத்தில் தினந்தோறும் வழக்கு விசாரணை செய்தலைக் கட்டாயப்படுத்துதல்
- யூரிமார்கள் சபையொன்றுடனோ அல்லது இல்லாமலோ மேல் நீதிமன்றத்தில் நடாத்தப்படும் சகல வழக்கு விசாரணைகளும் இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் தினந்தோறும் நடாத்தப்பட வேண்டுமென 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டத்தின் 263(1) ஆம் துணை ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், இவ்வாறு வழக்கு விசாரணைகள் நாளாந்தம் நடாத்தப்படுவதில்லை. இதன்காரணமாக பாரிய அளவில் வழக்குகள் மேல் நீதிமன்றங்களில் குவிந்துள்ளன. 2017 செப்ரெம்பர் மாதத்தில் இந்த நாட்டின் மேல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வரும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 17,565 ஆகும். நீதி நிருவாகம் தாமதமடைவது பிரதிகூலமான நிலைமைகளுக்கு காரணமாய் அமைகின்றமையினால் இந்த நிலைமைக்கு துரிதமாக மாற்றுவழிகளை செய்வது அத்தியாவசியமானதாகும்.

இதற்கமைவாக, விசேட சந்தர்ப்பங்களிலும் குறிப்பிடத்தக்க நியாயமான காரணங்கள் உள்ள சந்தர்ப்பங்களிலும் தவிர மேல் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நாளாந்தம் நடாத்தப்படுவதனை கட்டாயமாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டத்தை திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.