• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூல இறப்பர் மற்றும் இரசாயன பகுப்பாய்வு விஞ்ஞானகூடமொன்றை அங்கீகரித்தல்
- மூல இறப்பர் மற்றும் பெறுமதிசேர்க்கப்பட்ட இறப்பர் உற்பத்திகளை சருவதேச சந்தையில் விடுவதன் மூலம் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தின் அண்ணளவாக 8 சதவீதம் ஈட்டப்படுகின்றது. காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட சருவதேச தரங்களுக்கும் உயர் தொழினுட்பத்திற்கும் அமைவாக இலங்கையில் இறப்பர் சார்ந்த உற்பத்திகள் செய்யப்படுகின்றமையை உறுதிப்படுத்துவதற்கு இந்த உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூல இறப்பரின் தரத்தை உறுதி செய்யும் பொறுப்பு இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் 'மூல இறப்பர் மற்றும் இரசாயன பகுப்பாய்வு விஞ்ஞானகூடத்திற்கு' கையளிக்கப்பட்டுள்ளது.

இற்றைக்கு சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் தாபிக்கப்பட்டுள்ள இந்த விஞ்ஞாபனகூடமானது காலத்தின் தேவைகளுக்கும் சருவதேச அங்கீகரிக்கப்பட்ட தரங்களுக்கும் அமைவாக நவீனமயப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக, இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூல இறப்பர் மற்றும் இரசாயன பகுப்பாய்வு விஞ்ஞானகூடத்தை அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானகூடமொன்றாக நவீனமயப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.