• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுக நகரத்தில் கொழும்பு சருவதேச நிதி நகர கட்டடத்தொகுதியினை நிருமாணித்தல்
- கொழும்பு துறைமுக நகரத்தின் கடல் பகுதியை நிரப்பும் பணிகளில் 50 சதவீதம் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, இங்கு கொழும்பு சருவதேச நிதி நகர கட்டடத்தொகுதியின் நிருமாணிப்பு 2018 ஆம் ஆண்டின் இறுதியில் செய்யப்படவுள்ளது. இதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளின் நிருமாணிப்பு வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் சுற்றாடல் பாதிப்புகளை மதிப்பிடுதலானது தற்போது பொதுமக்களின் கருத்துக்காக விடப்பட்டுள்ளது. உத்தேச கட்டட தொகுதிக்கான வடிவமைப்பினை தெரிவு செய்வதற்காக சருதேச போட்டியொன்று நடாத்தப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய அமெரிக்க குடியரசின் Skid more owings & Merrill (SOM) நிறுவனத்திற்கு இந்தப் பணிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

உத்தேச நிருமாணிப்புக்கான முதலீடானது அண்ணளவாக 1 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாவதோடு, நேரடி வௌிநாட்டு முதலீடொன்றாக இந்த தொகையினைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் China Harbour Engineering Corporation, கம்பனி, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் வரையறுக்கப்பட்ட CHEC Port City Colombo (Pvt.) Ltd., கம்பனி ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.