• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'நல்லிணக்க அலைவரிசை' சார்பில் வடக்கு மாகாணத்தில் கலையக கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கான காணியை உடைமையாக்கிக் கொள்ளல்
- இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தின் இரண்டாவது அலைவரிசையாக 2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்திச் செல்லப்படும் 'Eye' அலைவரிசையின் ஔிபரப்பு காலத்தில் விளையாட்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு கூடுதலான முன்னுரிமை வழங்கப்பட்டதன் காரணமாக தழிழ் மொழி பேசும் விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைவரிசையொன்றின் தேவை எழுந்துள்ளது. தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் போது இத்தகைய தொலைக்காட்சி அலைவரிசையொன்று இருப்பது சிறந்ததாக இருக்கு மென்பதனால் 'நல்லிணக்க அலைவரிசை' என்னும் பெயரில் புதிய அலைவரிசையொன்றை தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக புறம்பான அலைவரிசையொன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அலைவரிசைக்குத் தேவையான தொழினுட்ப உபகரணங்கள் ஏற்கனவே கட்டளையிடப்பட்டுள்ளதோடு அதன் ஔிபரப்பு பணிகள் சார்பில் வடமாகாணத்தில் கலையக கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிக்கும் தேவையும் உள்ளது.

இதற்கமைவாக, சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள யாழ்ப்பாணம் / மீசாலை வீரசிங்கம் மத்திய மகா வித்தியாலயம் நடாத்திச் செல்லப்படும் காணியிலிருந்து 100 பேர்ச்சர்ஸ் காணியில் இந்த கலையக கட்டடத்தொகுதியை நிருமாணிப்பதற்கான இடம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரினால் குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இந்த காணியை இலங்கை ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.