• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இருதரப்பு கலந்துரையாடல் பொறிமுறையொன்றைத் தாபித்தல் சம்பந்தமாக இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளல்
- இலங்கைக்கும் பெல்ஜியத்துக்கும் இடையில் நிலவும் இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பினையும் மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில், இருநாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடல் பொறிமுறையொன்றைத் தாபிப்பதற்காக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் பெல்ஜியம் இராச்சியத்தின் அரசாங்க சேவைகள் வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வியாபாரம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.