• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1951 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சூட்டு எல்லைகள் மற்றும் இராணுவ பயிற்சி சட்டத்தை திருத்துதல்
- நாட்டில் தாபிக்கப்பட்டுள்ள சூட்டு பயிற்சி மைதானம், பாதுகாப்பு அமைச்சினால் தற்போது பயிற்சிக்காக வழங்கப்படுவது முப்படைக்கும் இலங்கை பொலிசுக்கும் மாத்திரமாகும். தனியார் பாதுகாப்பு முகவராண்மைகளின், அரசாங்க வங்கிகளின், அரசாங்க நிறுவனங்களின் மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்புச் செய்யப்படுபவர்களுக்கும் சருவதேச வணிக கப்பல்களின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுபவர்களுக்கும் சுடுகலன்கள் மற்றும் வெடிப் பொருட்கள் கையாள்கை தொடர்பில் தேவையான பயிற்சியினை மிக முறையாக வழங்கும் பொருட்டு இந்த சூட்டு பயிற்சி மைதானங்களை பயன்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.

இதற்கமைவாக, இந்த நோக்கத்திற்காக குறித்த சூட்டு பயிற்சி மைதானங்களைப் பயன்படுத்துவதற்கு வசதியளிக்கும் விதத்தில் 1951 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சூட்டு எல்லைகள் மற்றும் இராணுவ பயிற்சி சட்டத்தை திருத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.