• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'அரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல்' தொடர்பில் 2017-10-03 ஆம் திகதியிடப்பட்ட அரசாங்கத் தீர்மானத்திற்கு ஏற்ப நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் அறிக்கை
- அரசாங்க நிறுவனங்களுக்கான வாகனங்களை கொள்வனவு செய்வதற்கென தற்போது பின்பற்றப்பட்டுவரும் 'தொழிற்பாட்டு குத்தகை முறையினை' நடைமுறைப்படுத்துகையில் காணப்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக சனாதிபதியின் செயலாளரின் தலைமையின் கீழ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு 2017 ஒக்ரோபர் 03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அதன் கூட்டத்தில் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, கூறப்பட்ட குழுவினால் செய்யப்பட்ட பின்வரும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் போன்ற அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு தேவையான வாகனங்களை நேரடி கொள்வனவு முறைக்கூடாக கொள்வனவு செய்தல்.

(ii) சிரேட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தேவையான வாகனங்களை நிதிக் குத்தகை முறைக்கூடாக கொள்வனவு செய்தல்.

(iii) பாரிய பயன்பாடு மற்றும் உயர் பராமரிப்புக்கான டபள் கெப் (Double Cabs) வாகனங்களுக்கும் மற்றும் சில பயணிகள் ஆசனங்களுடன் கூடிய வாகனங்களுக்கும் தொழிற்பாட்டு குத்தகை முறையினை மேலும் பின்பற்றுதல்.

(iv) அரசாங்க நிறுவனங்களின் வாகனங்களின் ஆக்கத்திறன் வாய்ந்த பாவனை கருதி பொதுத் திறைசேரியின் கணக்கு தணிக்கையாளர் நாயகம் மூலம் முறையான நடைமுறையொன்றை செயற்படுத்துதல்.

(v) முறையான அங்கீகாரத்திற்கு அமைவாக தனித்த வாகனமொன்றுக்கு அலுவலர் ஒருவர் உரித்துடையவர் என்பதை உரிய அமைச்சின் பிரதான கணக்கீட்டு அலுவலர் உறுதிப்படுத்துதல்.

(vi) கலப்பு எரிபொருள் (Hybrid) இயந்திரங்களுடன்கூடிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமையளித்தல் மற்றும் 10 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களை அகற்றுவதற்கென, அவற்றின் உயர் பராமரிப்புச் செலவினைக் கருத்திற் கொண்டு, நடவடிக்கை எடுத்தல்.