• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் அரசாங்க பெறுகை முறையினுள் இலத்திரனியல் அரசாங்க பெறுகை முறையினை அறிமுகப்படுத்துதல்
- அரசாங்க பெறுகை முறைமையின் வௌிப்படைத் தன்மையினை அதிகரித்தல், பெறுகை செய்முறையினை கண்காணித்து ஒழுங்குபடுத்தல், ஒன்றிணைக்கப்பட்ட பெறுகைக்கூடாக பாரியளவிலான பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்தல், வழங்குநர்களை சமமாக நடத்துதல் ஆகியவற்றின் மூலமும் அவர்களுக்கான போட்டிமிக்க அடித்தளமொன்றை உருவாக்குவதன் மூலமும், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் மூலம் அடைந்து கொள்ளப்படவுள்ள நன்மைகளைக் கருத்திற் கொண்டு, இலத்திரனியல் பெறுகை முறையானது காலதாமதமின்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்நோக்கம் கருதி நியமிக்கப்பட்ட பணிக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளின் பேரில், இலங்கையில் அரசாங்க பெறுகை முறையினுள் இலத்திரனியல் அரசாங்க பெறுகை முறையினை அறிமுகப்படுத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.