• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு இரண்டு மாலுமி படகுகளை கொள்வனவு செய்தல்
- கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் படகுகளுக்கு வினைத்திறனான கப்பற்றுறை சேவைகளை வழங்கும் பொருட்டு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு இரு மாலுமி படகுகளை கொள்வனவு செய்வதற்கான அவசியம் எழுந்துள்ளது. இந்நோக்கம் கருதி, இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிதியங்களிலிருந்து 500 மில்லியன் ரூபா கொண்ட நிதி ஒதுக்கீடொன்று செய்யப்பட்டுள்ளது. ஆதலால், சர்வதேச போட்டி விலைமனுக்களை கோருவதன் மூலம் இரு (02) மாலுமி படகுகளை கொள்வனவு செய்யும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.