• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நிருமாணிக்கப்பட்டுவரும் களஞ்சிய கட்டடத் தொகுதிகளை முகாமை செய்தல்
- அறுவடை காலத்தின் போது விவசாய உற்பத்தி பொருட்கள் சந்தையில் மிகையாக காணப்படும் நிலைமை காரணமாக அத்தகைய பொருட்களின் விலைகள் வீழ்ச்சியுறுதலுக்கு தீர்வொன்றாக, அரசாங்கமானது விவசாயிகளின் விவசாய பயிர்களை களஞ்சியப்படுத்தும் பொருட்டு உயர்தரமான களஞ்சிய வசதிகளை அவர்களுக்கு வழங்கும் கருத்திட்ட மொன்றை அமுல்படுத்தியுள்ளது. இக்கருத்திட்டத்தின் கீழ் பொலன்நறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 600 மில்லியன் ரூபா செலவில் 03 களஞ்சிய கட்டடத் தொகுதிகளை நிருமாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில், இரத்தினபுரியில் களஞ்சிய நிர்மாணமானது ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய இரு களஞ்சியங்களினதும் நிர்மாண வேலையானது 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பூர்த்தி செய்யப்பட எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்களஞ்சிய கட்டடத்தொகுதிகளின் முகாமைத்துவத்தை மாதாந்த கட்டண அடிப்படையில் வௌித்தரப்பொன்றுக்கு குறித்தொதுக்குவது பொருத்த முடையதாக இருக்கும் என இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், பொலன்நறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள களஞ்சிய முகாமைத்துவத்திற்கான ஒப்பந்தங்களை இது சம்பந்தமான அனுபவத்தைக் கொண்ட பிராந்திய அபிவிருத்தி வங்கிக்கு குறித்தொதுக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.