• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய பயிலிளவல் படையணி என்பவற்றுக்கு சீருடை மற்றும் ஏனைய துணிவகைகளை வழங்குதல்
- இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய பயிலிளவல் படையணி என்பவற்றுக்குத் தேவையான சீருடை மற்றும் ஏனைய துணிவகைகள் என்பன உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து கேள்வி கோருவதன் மூலம் வழங்கப்படுகின்றன. ஆதலால், 2017 ஆம் ஆண்டுக்குத் தேவையான சீருடை மற்றும் துணிவகைகளை, 1,887.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் உள்நாட்டு ஆடை ஒதுக்கீட்டுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.