• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அக்குரேகொட பாதுகாப்புத் தலைமையக கட்டடத்தொகுதி கருத்திட்டத்தின் 06 ஆம் 07 ஆம் இலக்க கட்டடங்கள் சார்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப முறைமையொன்றை வழங்குதல்
- அக்குரேகொட பாதுகாப்புத் தலைமையக கட்டடத்தொகுதி கருத்திட்டத்தின் 06 ஆம் 07 ஆம் இலக்க கட்டடங்கள் சார்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப முறைமையொன்றினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச் சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 372.06 மில்லியன் ரூபா தொகையில் M/s VS Information (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச் சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.