• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணத்தில் பால் உற்பத்தி வலையமைப்பை தரமுயர்த்துதல்
- யாழ் நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் நாளொன்றுக்கு 5,000 லீற்றருக்கும் அதிகமாக பாலின் தேவை உள்ளமை அவதானிக்கப் பட்டுள்ளது. திரவப்பால் நுகர்வும் அதிகரித்துவருகின்றது. ஆதலால், இத்தேவையினைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பால் உற்பத்தி முகாமைத்து வத்திற்கான வசதிகள் தரமுயர்த்தப்படுதல் அத்தியாவசியமானதாகும்.

ஆதலால், யாழ் நகரில் திரவப்பால் மற்றும் பால்சார்ந்த உற்பத்தி வலையமைப்பை விரிவாக்கி வலுப்படுத்துவதற்கென பாலைப் பதப்படுத்தும் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கும் யாழ் மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் யாழ்கோ (YARLCO) பால் பதனிடல் தொழிற்சாலைக்கு இந்த இயந்திரங்களை கையளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 59.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் பிரேரிக்கப்பட்ட கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.