• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி
- யாழ் நகரிலிருந்து வடக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகமானது காங்கேசேன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான மூலப் பொருட்களை கொண்டு செல்வதற்காக நிருமாணிக்கப்பட்ட துறைமுக மொன்றாகும். கிட்டதட்ட 06 மீற்றர் ஆழம் கொண்ட இத்துறைமுகத்தில் 2,500 தொன்களுக்கு குறைவான சரக்கு கப்பல்களை தொழிற்படுத்த முடியும். இத்துறைமுகமானது இந்திய துறைமுகங்களுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளமையினால், பிராந்திய கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கும் பிராந்திய துறைமுகமொன்றாக அதனை அபிவிருத்தி செய்தும், சருவதேச கப்பற் செயற்பாடுகளுடன் அதனை இணைக்கும் சாத்தியப்பாடொன்று உள்ளது.

அதற்கிணங்க, காங்கேசன்துறை துறைமுகத்தின் அலைதாங்கி புனரமைப்பு, அதன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கும் பொருட்டு புதிய இறங்குதுறையொன்றின் நிருமாணம் சார்பான திட்டங்களை இலங்கை துறைமுக அதிகாரசபை வடிவமைத்துள்ளது. துறைமுக வர்த்தக நடவடிக்கைகளை முனனெடுப்பதற்காக அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதுடன் களஞ்சியசாலையொன்றைத் தாபிப்பதற்கும் நிருவாக கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், இந்த நோக்கத்திற்குத் தேவையான 50 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியொன்றை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடமிருந்து இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கைமாற்றும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.