• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'நிலசெவன' வீடமைப்பு கருத்திட்டத்திற்காக கண்டி குண்டசாலையிலிருந்து மாற்று காணியொன்றை பெற்றுக் கொள்ளல்
- அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்குடன், அரச - தனியார் பங்குடமை கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்தப்படும் 'நிலசெவன' வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் கண்டியில் குண்டசாலை பிரதேசத்தில் வீடமைப்புக் கட்டடத்தொகுதியொன்றை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது. இந்நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியானது தியான மத்திய நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளதனால் இச்சமயத் தளத்தில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய தடைகளை கருத்திற் கொண்டு, இக்கருத்திட்டத்தை வேறொரு அமைவிடத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதலால், குண்டசாலை பிரதேசத்தில் மஹவத்த கிராமத்தில் அமைந்துள்ள அரசாங்க காணித் துண்டொன்றை மாற்றுக் காணியாக ஒதுக்கும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.