• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மக்கள் சீனக் குடியரசில் இலங்கை தேயிலையை பிரபல்யப்படுத்துதல்
- இலங்கைத் தேயிலையின் தர அம்சம் காரணமாக, தேயிலை கருதி ஆழமாக வேரூன்றிய கலாசாரமொன்றை கொண்டுள்ள சீனாவிற்குள் இலங்கை தேயிலையை பிரபல்யப்படுத்துவதற்கான சந்தர்ப்பமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. சீனமக்கள் பச்சை தேயிலையிலிருந்து கறுப்புத் தேயிலை வரையான நுகர்வுக்கான போக்கினை காட்டுவதால் இலங்கையின் கறுப்புத் தேயிலையை சீன சந்தையில் பிரபல்யப்படுத்துவதற்கு முறைசார்ந்த நடைமுறையொன்றை அறிமுகம் செய்தலானது பொருத்தமுடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, மக்கள் சீனக் குடியரசில் உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் இந்நோக்கம் கருதி குறித்த நடைமுறையொன்றை தயாரிக்கும் பொருட்டும் சீனாவில் தேயிலை ஏலங்களை நடாத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.