• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடற்றொழில் துறைமுக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மீன்பிடித் துறைமுகம் மற்றும் நங்கூரமிடும் தளங்களை மையமாகக் கொண்ட கூட்டுமுயற்சி வர்த்தகத்தினை நடைமுறைப்படுத்தல்
- கடற்றொழில் துறைமுகங்களில் காணப்படும் வசதிகளை பயன்படுத்தியும் கடற்றொழில் துறைமுகங்களுக்கு அருகாமையில் வசிக்கும் மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொண்டும், அதேபோல் தனியார்துறை முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் பெறுமதிசேர் கடற்றொழில் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கியும் புதிய வியாபார சமூகமொன்றை உருவாக்குவதற்கும், புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும் மற்றும் கடற்றொழில் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, கடற்றொழில் துறைமுக கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடற்றொழில் துறைமுக நடவடிக்கைகளை பன்முகப்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திக்கோவிட்ட, மோதரை, காலி, கொட்பே (Cod Bay) மற்றும் ஒலுவில் ஆகிய சகல கடற்றொழில் துறைமுகங்களுடனும் இணைந்த சேவை வசதிகளை உருவாக்குதல் மற்றும் கடற்றொழில் சார்ந்த மற்றும் கடற்றொழில் சாராத படகுகளின் திருத்தங்கள் தொடர்பான வசதிகளையும் மேம்படுத்தல், சகல கடற்றொழில் துறைமுகங்கள் மற்றும் நங்கூரமிடும் தளங்கள் ஆகியவற்றுக்கு மிக அருகாமையிலுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஏனைய சில கருத்திட்டங்களின் அமுலாக்கம் உள்ளடங்கலாக சூரிய மின்சக்தி மற்றும் காற்று மின்சக்தி நிலையங்களை நிருமாணித்தல் ஆகியவற்றின் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.