• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் மாவட்டத்தில் உவர்நீர் இறால் செய்கைக்கான புதிய பண்ணை யொன்றைத் தாபிப்பதற்கு அனுமதி வழங்குதல்
- இலங்கையில் தற்போது இயங்கும் பிரதான வர்த்தக நீர்வாழ் உயிரின செய்கையானது உவர்நீர் இறால் செய்கையாகுமென்பதோடு, புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 4,500 ஹெக்டயார் பிரதேசத்தில் 1,320 இறால் பண்ணைகள் மிகப் பரவலாக உள்ளன. இந்த இறால் பண்ணைகளுக்குத் தேவையான நீர் பெற்றுக் கொள்ளப்படும் பிரதான தோற்றுவாயானது சிலாபம், புத்தளம் மற்றும் முந்தல் ஆகிய களப்புகளை இணைக்கும் பறங்கிக் கால்வாயாகும். இதன் மூலம் நீர் பெற்றுக் கொள்ளக்கூடிய உச்ச எல்லையை விஞ்சி நீர் பெற்றுக் கொள்வதன் காரணமாக இந்த கைத்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரதிகூலமான பாதிப்பும் இதற்காக வேறு போதுமான நீர் தோற்றுவாய் இல்லாமை போன்ற காரணங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இறால் வளர்ப்புக்கு இந்த மாவட்டத்தில் புதிதாக காணிகளை பயன்படுத்தி பண்ணைகளை உருவாக்குவது 2003 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டது.

போகமுறைக்கு நேர அட்டவணைப்படி நீர் விநியோகிப்பதன் மூலம் தற்போது பறங்கிக் கால்வாய் நீர் நிலையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று தற்போது பின்பற்றப்படும் குறைந்த விளைவு வீத பெருக்க கீழ் இறால் செய்கை மேற்கொள்ளும் முறைக்குப் பதிலாக பயனுள்ள கூடிய விளைவு வீத பெருக்க முறையின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் இறால் பண்ணைகளை உருவாக்குவதற்கான புதிய பிரேிப்புகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக, இறால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் உயர் சாத்தியம் உள்ளதாக உறுதிப்படுத்திக் கொள்ள்பபடும் கருத்திட்டப் பிரேரிப்புகளுக்கு கூடிய விளைவு வீத பெருக்க முறையின் கீழ் மாத்திரம் கடும் ஒழுங்குறுத்துகைக்கு உட்பட்டு புத்தளம் மாவட்டத்தில் புதிய இறால் பண்ணைகளை நிருமாணிப்பதற்கு இடமளிக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.