• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீரகெட்டிய ஜோர்ஜ் ராஜபக்‌ஷ விளையாட்டரங்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் சார்பில் நட்டஈடு செலுத்துதல்
- வீரகெட்டிய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் ஜோர்ஜ் ராஜபக்‌ஷ விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வதற்காக0.3288 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகள் சார்பில் நட்டஈடு மற்றும் வட்டித் தொகை என்பவற்றை செலுத்துவதற்குத் தேவையான 19.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.