• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுக நகரத்திற்கு போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் - நிலக்கீழ் கடல்வழி பாதையொன்றை நிருமாணித்தல்
- உத்தேச கொழும்பு துறைமுக நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை நிருமாணிப்பதற்காக அரசாங்க - தனியார் பங்குடமை முறைமையினை பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கொள்ளுபிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலிருந்து கொழும்பு சைத்திய வீதிவரை துறைமுக நகரத்திற்கு நுழைவுடன் நிலக்கீழ் பாதையொன்றாக சமுத்திர வீதியை நீடிக்கும் கருத்திட்டத்தை துறைமுக நகர கம்பனியுடன் அரசாங்க - தனியார் பங்குடமை கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.