• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்துசமுத்திர வலய அமைப்பின் (Indian Ocean Rim Association) உறுப்பு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- உறுப்பு நாடுகளுக்கிடையில் புத்தாக்கங்கள் மற்றும் போட்டிகரமான நிலை என்பவற்றை உருவாக்கும் நிலையில் பாரிய கம்பனிகள், சருவதேச உற்பத்தி வலயமைப்புடன் நுண்பாக தொழில்முயற்சிகள் முறைசார துறையினை இணைப்பதற்கும் அதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் இந்துசமுத்திர வலய அமைப்பின் (Indian Ocean Rim Association) கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இந்த சங்கத்தின் உறுப்பு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சின் உரிய உத்தியோகத்தர் ஒருவரினால் கைச்சாத்திடும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.