• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருத்துவ கல்விக்கான ஆகக்குறைந்த தகைமைகளை விதித்துரைத்தல்
- மருத்துவக் கல்வி சம்பந்தமாக தேவைப்படும் ஆகக்குறைந்த தகைமைகளை மருத்துவ கட்டளைச்சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்துவது நீண்ட காலமாக நிலவும் தேவையொன்றாகும். மருத்துவக் கல்வியின் பொருட்டு பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவதற்கான ஆகக்குறைந்த தகைமைகள், மருத்துவக் கல்வி பாடநெறியின் உள்ளடக்கம், மருத்துவ மாணவர்களை மதிப்பிடல், கல்விசார் பதவியணி, கல்வி வளங்கள் மற்றும் வசதிகள், பாடநெறி மீளாய்வு, கல்வி செய்ற்பாடினை தொடர்ச்சியாக இற்றைப்படுத்தல், நிருவாகமும் முகாமைத்துவமும் போன்ற மருத்துவக் கல்விக்குரிய துறைகளை தழுவும் விதத்தில் மருத்துவக் கல்விக்குத் தேவையான ஆகக்குறைந்த நியமங்களின் வரை இலங்கை மருத்துவ சபையினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நியமங்களை விதித்துரைப்பது சம்பந்தமாக இலங்கை மருத்துவசபை, இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் அடங்கலாக உரிய தரப்புகள் தற்போது உடன்பாட்டிற்கு வந்துள்ளன.

பல்கலைக்கழக மருத்துவ பட்டத்திற்காக அனுமதிக்கப்படும் ஒவ்வொரு மாணவரும் இலங்கை கல்விப் பொதுத் தராதர (உயர் தரம்) பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதிகவியல் பாடங்களில் ஒரே அமர்வில் உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாடங்களில் திறமை சித்திகளும் (Credit Passes) பௌதிகவியல் பாடத்தில் சாதாரண சித்தியும் (Simple Pass) மருத்துவக் கல்விக்கு மாணவர்களை உள்வாங்குவதற்குத் தேவையான ஆகக்குறைந்த தகைமைகளாக கருதவேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக, இலங்கையில் மருத்துவ கல்விக்கான ஆகக்குறைந்த நியமங்களை, மருத்துவ கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளாக அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.