• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நனோ - செய்மதி தொழினுட்பம் மற்றும் விண்வௌி பொறியியல் பற்றிய தேர்ச்சிகளைப் பெற்றுக் கொள்ளல்
- விண்வௌி பயணங்களுக்கு இதுவரை முயற்சிக்காத நாடுகளுக்கு அடிப்படை செய்மதி தொழினுட்பத்தை பெற்றுக் கொள்ளும் ஆற்றலை வழங்குவதனை நோக்காகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டமொன்று யப்பான் தேசிய பல்கலைக்கழகமொன்றான கியுசு தொழினுட்ப நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நனோ - செய்மதியொன்றை வடிவமைத்தல், நிருமாணித்தல், விருத்தி செய்தல், நிறுவுதல், பரிசோதித்தல், ஏவுதல் மற்றும் செயற்படுத்துதல் என்னும் மொத்த செயற்பாடுகள் தொடர்பிலான அனுபவம் பெற்றுக் கொடுக்கப்படும். இதன் முதலாம் கட்டத்தின் கீழ் யப்பான், மொங்கோலியா, கானா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பொறியியலாளர்களைக் கொண்ட குழுவொன்றினால் செயற்படுத்தப்பட்ட செய்மதியொன்று தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கிழ நனோ - செய்மதியொன்றை நிருமாணித்து ஏவும் அடுத்த கட்டம் சார்பில் நவீன தொழினுட்பத்திற்கான ஆத்தர் சீ கிளார்க் நிறுவகத்தின் இரண்டு பொறியியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இந்த துறைசார்ந்த அறிவு மற்றும் அனுபவத்தை இதன் மூலம் இலங்கைக்கு பெற்றுக் கொள்ள முடியும் இதற்கமைவாக, நனோ - செய்மதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கையின் பங்களிப்பு சம்பந்தமாக யப்பான் கியுசு தொழினுட்ப நிறுவனத்திற்கும் நவீன தொழினுட்பத்திற்கான ஆத்தர் சீ கிளார்க் நிறுவகத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு ஆராய்ச்சி உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.