• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக சேதமடைந்த அத்துடன் அபாய வலயத்தில் அமைந்துள்ள காணிகளின் தனிப்பட்ட உரிமையாளர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்
- மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாகவும் அதிஅபாய நிலைமை காரணமாக அப்புறப்படுத்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களிருந்து மாற்று வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்த சகலருக்கும் மாற்று வீடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு, இவ்வாறு வழங்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 170 ஆகும்.

இந்த அனர்த்தத்தின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினால் குறியிடப்பட்ட அபாய வலயத்தில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் சேதமடைந்த வீடுகள் உள்ள காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய 110 காணி உரிமையாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த 110 காணி உரிமையாளர்களுக்கு அவர்களுடைய காணிகளினதும் வீடுகளினதும் மதிப்பீட்டு பெறுமதியை நட்டஈடாக வழங்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.