• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீரியல் ஆய்வு - கல்முனை பிரதான கருத்திட்டம்
- கல்முனை மற்றும் சம்மாந்துறை கூட்டு துணை நகர அபிவிருத்தி பிரதான திட்டத்தை தயாரிக்கும் பணியானது நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் ஒத்தாசையினைப் பெற்றுக் கொண்டு தற்போது இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதன்போது பரந்துபட்ட நீரியல் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதோடு, கல்முனை பிரதேசத்தில் காணப்படும் நீரை தேக்கிவைத்துக் கொள்ளும் பிரச்சினை மற்றும் அதன் மூலம் உருவாகும் வௌ்ளப்பெருக்கு நிலைமையை தடுப்பதற்காக பொருத்தமான தீர்வொன்றை நிர்ணயித்தல் இந்த ஆய்வின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, இந்த நீரியல் ஆய்வு மேற்கொள்ளும் நோக்கத்திற்காக சிங்கப்பூர் M/s. Hydroinformatics Institute Pte. Ltd., நிறுவனத்தின் ஒத்தாசையினைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்குமாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.