• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரன வரை புதிய புகையிரத பாதையை நிருமாணிக்கும் கருத்திட்டத்திற்காக காணி சுவீகரிக்கப்படுகின்ற மையினால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- ரஜரட்ட நவோதய - சனாதிபதி நிகழ்ச்சித்திட்டம் - 'எழுச்சிப் பொலன்நறுவை' மாவட்ட அபிவிருத்திக் நிகழ்ச்சித்திட்டத்தின் (2016 - 2020) கீழ் குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரன வரை 84 கிலோ மீற்றர் புதிய புகையிரத பாதையை நிருமாணிக்கும் கருத்திட்டத்திற்கு அண்ணளவாக 300 ஹெக்டயார் காணி சுவீகரிக்கப்படவேண்டிவரும். இந்த காணி சுவீகரிப்பு பணிகளை தடையின்றி துரிதமாக மேற்கொள்ளும் நோக்கில் இதனால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மிக நியாயமான நட்டஈட்டினை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் பாாிய அளவிலான கருத்திட்டங்களுக்கு சுவீகரிக்கப்படும் காணிகள் சார்பில் நட்டஈடு செலுத்தும் விசேட வழிமுறையினை பின்பற்றி நட்டஈடு செலுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.