• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேராதனை றோயல் தாவரவியல் பூங்காவை அபிவிருத்தி செய்தல்
- 196 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த பேராதனை றோயல் தாவரவியல் பூங்கா 147 ஏக்கர் நிலப்பிரதேசத்தை கொண்டுள்ளதோடு, 3,500 இற்கும் மேற்பட்ட விசேட தாவர வகைகளை இங்கு காணலாம். சருவதேச மதிப்பு பெற்ற இந்த தாவரவியல் பூங்காவை கண்டுகளிப்பதற்கு ஆண்டொன்றில் சுமார் 1.6 மில்லியன் உள்நாட்டு வௌிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தருவதோடு, அவர்களுடைய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அதன் வசதிகளை மேலும் விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பேராதனை றோயல் தாவரவியல் பூங்காவை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை எதிர்வரும் ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காக 385 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியினை பெற்றுக் கொள்வதற்குமாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.