• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்திற்காக புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
- தேர்தல் ஆணைக்குழுவின் நியதிச்சட்ட நடவடிக்கைகளையும் அதேபோன்று நிருவாக பணிகளையும் இலகுவாக நடாத்திச் செல்வதற்கு நிருவாக மாவட்ட மட்டத்தில் 25 பிரதேச அலுவலகங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் அலுவலகமானது யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கட்டடத்திலிருந்து ஒதுக்கப் பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட இடத்திற்குள் குறைந்த வசதிகளின் கீழ் நடாத்திச் செல்லப்படுகின்றது. ஆதலால் இந்த அலுவலகத்துக்கு புறம்பான அலுவலக கட்டடமொன்றை நிருமாணிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளதோடு, யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணித் துண்டொன்று ஏற்கனவே இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தற்கால மற்றும் எதிர்கால தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு 18,425 சதுர அடி கொண்ட நான்கு மாடி கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் இதற்காக 97.7 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினைப் பெற்றுக் கொள்வதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.