• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு புறநகர் புகையிரத பாதை கருத்திட்டத்தின் சாத்தியத்தகவாய்வு மற்றும் விரிவான திட்டம் தொடர்பிலான மதியுரைச்சேவைகளை பெற்றுக் கொள்ளல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் புகையிரத முறைமையினை மேம்படுத்தும் குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டத்தின் சாத்தியத்தகவாய்வு மற்றும் விரிவான திட்டத்திற்கான மதியுரைச்சேவை ஒப்பந்தத்தை M/s. DOHWA Engineering Co. Ltd., நிறுவனத்துக்கும் அதன் பங்காளர்களுக்கும் 256,030 ஸ்ரேலிங் பவுண், 6,481,575 ஐக்கிய அமெரிக்க டொலர் மற்றும் 379,213,616/- ரூபா கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.