• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக அந்த இடத்திலிருந்து வௌியேற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000/- ரூபா வீதம் வீட்டு வாடகைக் கொடுப்பனவொன்றை மேலும் வழங்குதல்
- 2017‑04‑14 ஆம் திகதியன்று கொலன்னாவ மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் விளைவாக தமது வீடுகளை இழந்தவர்களுக்கும் உயர் ஆபத்துமிக்க தாம் வாழ்ந்த வீடுகளை விட்டு வௌியேறிய குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கான வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 98 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் 2017‑11‑08 ஆம் திகதியன்று மாற்றீடான வீடுகள் மேலும் 72 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படும்வரை மாதாந்த வீட்டு வாடகையாக 50,000/- ரூபா 2017 ஆகஸ்ட் மாதம் வரை அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கிணங்க, கடைசி முறையாக மீள் குடியமர்த்தப்பட்ட 72 குடும்பங்களுக்கான வீட்டு வாடகையை படியை 2017 ஆகஸ்ட் மாதம் வரை இரு (02) மாத காலப்பகுதிக்கு வழங்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.