• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யான்ஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டத்தின் இடதுகரை பிரதான கால்வாயை நிருமாணித்தல்
- அண்மைய காலங்களில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் பாரியளவு நீர்ப்பாசன அபிவிருத்தி கருத்திட்டங்களில் ஒன்றான யான்ஓயா நீர்த்தேக்க அபிவிருத்தி கருத்திட்டமானது பயிர்ச்செய்கை நோக்கங்கள் கருதி நீர்பற்றாக்குறையினை எதிர்கொள்ளும் அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பிரதேசங்களிலுள்ள கிட்டத்தட்ட 4,190 ஹெக்டெயர் கொண்ட காணிகளுக்கு நீரை வழங்குகின்றது. ஆதலால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, வடிவமைத்தல் மற்றும் நிருமாணித்தல் என்னும் அடிப்படையில் 39.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு, இக்கருத்திட்டத்தின் இடதுகரை பிரதான கால்வாய் நிருமாணத்திற்கான ஒப்பந்தத்தை M/s. China CAMC Engineering Co, Ltd (CAMEC) நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.