• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சூர்யபள சங்கிராமய' என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்க நிறுவனங்களுக்கு சூரிய வலுசக்தி முறைமைகளை வழங்குதல்
- 'சூர்யபள சங்கிராமய' என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், அரசாங்க நிறுவனங்களுக்கு சூரிய வலுசக்தி முறைமைகளை வழங்கும் பொருட்டு கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்நோக்கம் கருதி சூரிய வலுசக்தி முறைமைகளை நிறுவக்கூடிய அத்தகைய அரசாங்க நிறுவனங்களை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை இனங்கண்டுள்ளதுடன், இச்சூரிய வலுசக்தி முறைமைகளை நிறுவும் நோக்கத்திற்காக பொருத்தமான நிறுவனங்களை தெரிவு செய்யும் பொருட்டு கேள்விகள் கோரப்பட்டுள்ளன. அதற்கிணங்க, 63 அரசாங்க வைத்தியசாலைகள், 13 அரசாங்க பாடசாலைகள் மற்றும் 01 பிரதேச செயலகப் பிரிவு ஆகியவற்றில் சூரிய வலுசக்தி முறைமை களை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.