• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரகம, அலுபோமுல்ல சிலுவைச் சந்தியில் சந்தை மற்றும் வர்த்தக கட்டடத் தொகுதி நிருமாணிப்பு
- பாணந்துறை - ஹொரண பிரதான வீதி வழியே பண்டாரகம அலுபோமுல்ல சிலுவைச் சந்திக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள, பண்டாரகம பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான காணியில் ஒரு சந்தை, ஒரு வர்த்தக கட்டடத்தொகுதி மற்றும் பல்நோக்கு கட்டடமொன்று ஆகியவற்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் கீழ் 120 வர்த்தக சாவடிகளை நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, 'சுகித்த புரவர' நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் இந்நோக்கம் கருதி கூறப்பட்ட கூட்டுறவு சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடும் பொருட்டும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.