• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை / மருத்துவ பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கான கேள்வி
- இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான காலியிலுள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலையில், அதன் சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகளை முன்னேற்றும் பொருட்டு, சத்திரசிகிச்சை / மருத்துவ பிரிவுகளை விரிவுபடுத்துவது அவசியமாகும். ஆதலால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 690 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு அதன் நிருமாண ஒப்பந்தத்தை M/s Subasinghe Contractors & Earth Movers நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.