• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நவீன ஆராய்ச்சி, அபிவிருத்தி கட்டடத் தொகுதியின் வௌி வேலைகள் மற்றும் காணி அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஒப்பந்தத்தை வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 215.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு, மாலபேயில் அமைந்துள்ள கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்தில் நவீன ஆராய்ச்சி, அபிவிருத்தி கட்டடத் தொகுதியின் வௌி வேலைகள் மற்றும் காணி அபிவிருத்தி பணிகள் தொடர்பிலான ஒப்பந்தத்தை M/s Ranasiha Lanka Construction (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.